அருள்மிகு அக்னீஸ்வரர் சுவாமி திருக்கோவில்
- நல்லாடை -
அருள்மிகு மாயூரநாதசுவாமி திருக்கோயில், மயிலாடுதுறை - 609 001.

பார்வதியை மகளாக பெற்ற தட்சன், ஒரு யாகம் நடத்தினான். அதற்கு சிவனை அழைக்கவில்லை. எனவே, அம்பாளையும் யாகத்திற்கு செல்ல வேண்டாமென கூறிவிட்டார் சிவன். மனம் பொறுக்காத பார்வதிதேவி யாகத்திற்கு சென்றாள். சிவன், வீரபத்திர வடிவம் எடுத்து யாகத்தை அழித்தார். அப்போது, யாகத்தில் பயன் படுத்தப்பட்ட மயில் ஒன்று அம்பாளின் பாதத்தை சரணடையவே, அதற்கு அடைக்கலம் கொடுத்து காத்தாள் அம்பாள். தன் சொல்லை மீறி, யாகத்திற்கு வந்ததால் அம்பாளை, மயில் வடிவம் எடுக்கும்படியாக தண்டித்தார் சிவன். மயிலாக மாறிய அம்பாள் இத்தலத்திற்கு வந்தாள்
சிவனை வேண்டி தவமிருந்தாள். அவளை பிரிய மனமில்லாத சிவனும், மயில் வடிவத்திலேயே இங்கு வந்தார். அம்பாளின் பூஜையில் மகிழ்ந்து கௌரிதாண்டவ தரிசனம் தந்ததோடு, அம்பாளின் சுயரூபம் பெறவும் அருள் செய்தார். மயிலாக வந்து அருள் செய்ததால், மாயூரநாதர் என்றும் பெயர் பெற்றார்
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் திருக்கடையூர்

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அட்டவீரட்ட தலங்களில் இது எமனை காலால் எட்டி உதைத்து சம்காரம் செய்த தலம். கருவறைக்குள் இருக்கும் இந்த மூலவர் ஒரு லிங்கம்தான் என்றாலும் அதை உற்றுப் பார்க்கும்போது பின்னால் இன்னொரு லிங்கம் பிம்பமாக தெரியும். முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் சிவன் சன்னதி வலதுபுறம் நந்திக்கு அருகே வெளிப்பிரகாரத்தில் உள்ள கள்ள வாரண விநாயகர் சன்னதி விநாயகரின் மூன்றாவது படை வீடாகும்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 110 வது தேவாரத்தலம் ஆகும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது கால சக்தி பீடம் ஆகும்.
அருள்மிகு சனீஸ்வர பகவான்கோயில் - திருநள்ளாறு

திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோவில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 52ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தில் சனீசுவரன் இறைவன் வணங்கி பேரு பெற்றார். அதனால் இத்தலத்தில் உள்ள சனீசுவரன் புகழ்பெற்று விளங்குகிறார். இத்தல சனீசுவரரை வணங்கினால் ஏழரை சனி உள்ளிட்ட பல சனிகளின் பிரச்சனை தீரும். நளதீர்த்ததில் நீராடி சனீசுவரை தரிசனம் செய்து, இறைவன் தர்பானேசுவரர் வழிபட்டு பேரு பெருகின்றனர். இத்தலம் நாசாவின் ஒரு விண்கலத்தை ஸ்தம்பிக்க வைத்ததாம்
சனி பார்வையில் உள்ள பக்தர்கள் இத்தலத்திற்கு சென்று எள்ளுடன் கூடிய தீபம் ஏற்றி அன்னதானம் செய்தால் சனிபகவான் அருள் பரிபூரணமாக கிட்டும். இத்தலத்தில் பூஜைசெய்து மேன்மை பெற்ற நளமன்னரால் திருநள்ளாறு என்ற பெயரைக் கொண்டு சிறப்புடன் விளங்குகிறது. தோஷ நிவர்த்தி தரும் பரிகார தலம்